காலணி ஆதிக்க காலங்களில் பிரான்சிடம் அடிமைப்பட்டிருந்த லெபனான் விடுதலையடையும் பொழுது அதன் ஆட்சி அதிகாரங்கள் யாவும் கிறிஸ்தவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது . காலணியாதிக்க காலங்களில் மதமாற்ற வலியுறுத்தல்கள் லெபனானிய மக்களை நாற்பது விழுக்காடுகளுக்குமேல் கிறிஸ்தவர்களாக மாற்றியது . பூர்வீக குடிகளான இசுலாமிய மக்களிடையே ஷியா , சுனி முஸ்லீம் என இரு பிரிவினைகள் காணப்பட்டன . லெபனான் விடுதலையடைந்த பிற்பாடு , இஸ்ரவேலினுடைய நிலவிரிவாக்க ஆசையினால் தெற்கு லெபனான் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன . அக்காலத்தில் லெபனான் ஆட்சியாளர்களுடைய பிற்போக்கான செயற்பாடுகளால் மக்களுடைய ஆதரவை அரசு இழந்தது . மாறாக கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்து ஈற்றில் இவை ஆயுதப்போராட்டத்திற்கு வழிகோலியது . நிலமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இராணுவத்தை அனுப்பி கடைசியில் தனது தலையில் தானே மண்ணை வாரிக்கொட்டியது .
ஹிஸ்புல்லாவின் தோற்றம்
எண்பதுகளில் நில ஆக்கிரமிப்புச்செய்த இஸ்ரவெலியர்களுக்கு எதிராக இஸ்லாமிய குழுக்கள் பல ஆயுதப்போராட்டங்களை கையில் எடுத்தன . அவற்றுள் ஷியா முஸ்லீம்களை அடிப்படையாகக்கொண்ட ஹிஸ்புல்லா என்ற அமைப்பின் கொறில்லாப்போர் முறையும் அவர்களது தாக்குதல்களுமே இருபது ஆண்டுகளாய் ஆக்கிரமிப்புச் செய்த இஸ்ரவேலியர்களை தெற்கு லெபனானிலிருந்து துரத்தியது என்பதை யாரும் மறுக்கமுடியாது .
எழுபதுகளில் அரச பதவிகள் , ஆட்சி அதிகாரங்களில் உள்ள கிறிஸ்தவ தலைவர்களினது பாசிசப்போக்கினால் ஒதுக்கப்பட்ட மக்கள் மேற்கொண்ட கிளர்ச்சிகள் ஆர்ப்பாட்டங்களில் பயனளிக்காமல் ஆயுதப்போராட்டமாக மாறியது . நிலமைகளை சீர் செய்வதெனக்கூறி அமெரிக்க இராணுவம் கால் பதித்தது . பின்னர் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கும் ஆயுதப்போராட்டங்களை மெற்கொளும் இவ் அமைப்புகளுக்கும் தொடர்பெனக்கூறி இஸ்ரவேல் தென்லெபனானை கைப்பற்றி தலைநகர் வரை முன்னேறியது . இவ் ஆக்கிரமிப்பானது அமெரிக்காவின் ஆசியோடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது . இவற்றை தடுத்து களமாடிய ஹிஸ்புல்லா இயக்கத்தினது தற்கொலைத்தாக்குதல்கள் , கொறில்லாத்தாக்குதல்கள் அமெரிக்க இஸ்ரவேலியர்களை நிலைகுலையவைத்தன . குறிப்பாக கரையோர அமெரிக்க கடற்படைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தற்கொலை தாக்குதல்கள் அமெரிக்காவை தலைக்குனிவோடு தாயகம் திரும்ப வைத்தன .
ஹிஸ்புல்லா அமைப்பானது மத பற்றுறுதியோடு கடுமையான போக்கைக்கடைப்பிடித்ததனால் ஆரம்பகாலங்களில் மக்களின் ஆதரவு சற்று குறைவாக இருந்தாலும் பிற்காலத்தில் ஒரு மெத்தனப்போக்கை கடைப்பிடித்து சகல முஸ்லீம்களினதும் ( ஷியா , சுனி ) கிறிஸ்தவர்களினதும் ஆதரவைப்பெற்று இன்று ஒரு மரபு வழி இராணுவ அமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது . இதற்கு இராணுவதளபாடங்கள் , நிதியுதவிகள் என்பவற்றை வழங்கி பின்புலத்தில் சிரியா , ஈரான் நாடுகள் பக்கபலமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது . ஏற்கன்வே எழுபதுகளில் சிரியா மீது இஸ்ரவேல் படையெடுத்து நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பது , சிரியாவின் இத்தகைய செயற்பாடுகளுக்கு வழிகோலின . ஹிஸ்புல்லா அமைப்பானது மேற்குலகினால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டாலும் லெபனானில் மக்களின் பெரும்பான்மை செல்வாக்கைப்பெற்று அரசியல் பிரிவு , இராணுவப்பிரிவு இரண்டையும் நிறுவி வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறது . அதன் அரசியல் பிரிவினர் ஆட்சி அதிகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தி அந்நாட்டு அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாக வளர்ச்சியடைந்துள்ளனர் . மேலும் அவர்களுடைய சமுக சேவைகள் குறிப்பாக இலவச மருத்துவமனைகள் , பாடசாலைகள் மற்றும் விவசாயகூடங்களை நிறுவியமை போற்ற செயற்பாடுகள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தன . மக்கள் அவர்களை ஒரு காவிய நாயகர்களாக போற்றுகிறார்கள் .
இவ்வாறு மக்கள் செல்வாக்கு பெற்றிருந்தாலும் , இராணுவ வலிமையில் இஸ்ரவேல் மேலோங்கியே காணப்பட்டது . இஸ்ரவேலியர்கள் மேற்கொண்ட விமானத்தாக்குதல்கல் , மோட்டார் , ஏவுகணைத்தாக்குதல் போன்ற கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல ஆயிரம் மக்களை உயிர்ப்பலியாக்கின . பல கோடி சொத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டன . ஈற்றில் ஹிஸ்புல்லாக்களின் போராடும் வலிமையும் மக்களின் பக்கபலமும் இஸ்ரவேலியர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது . இதனால் இரண்டு தசாப்தகாலமாக நீடித்த போர் , தெற்கு லெனானை இஸ்ரவேலியர்கள் பின்வாங்கியதோடு சற்று தணிந்தது . இன்று லெபனானில் இரண்டு இராணுவங்கள் , ஒன்று அரச ( தேசிய ) இராணுவம் மற்றயது ஹிஸ்புல்லா இராணுவம் . இதனால் ஹிஸ்புல்லா அமைப்பினது ஆயுதங்களை களையவேண்டும் என்ற குரல் அமெரிக்கா , இஸ்ரவேல் போன்ற நாடுகளால் வலியுறுத்தப்படுகிறது . அத்தோடு நின்றுவிடாது அதை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் சித்தரிக்கின்றன . அடுத்த நாட்டை ஆக்கிரமித்து கனரக ஆயுதங்களால் மக்களை அழிப்பது நன்முறையாக தெரிகிறது இவ்வுலகிற்கு , ஆனால் மண்ணையும் மக்களையும் மீட்கப்போராடினால் அது வன்முறையாம் !
Alivetamil blog
internet marketing
3 comments:
// மண்ணையும் மக்களையும் மீட்கப்போராடினால் அது வன்முறையாம்! //
நியாயமான கேள்வி தான.. ஆனால் ஹிஸ்புல்லா பக்காத் தீவிரவாத அமைப்புத் தான் ... ரபிக் ஹரிரியை என்ன மண்ணுக்கு அவர்கள் கொல்லவேண்டும் ... !!!
இந்தக் கட்டுரை பக்கா PRO-HIZBOLLAH வாக இருக்குது சகோ.
உங்களுடைய பின்னூட்டலுக்கு நன்றி இக்பால் செல்வன்
லெபனான் முன்னாள் பிரதமரும் பல பில்லியன்களுக்கு சொந்தக்காரருமாகிய ரபிக் ஹரிரியினி படுகொலை நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஆனால் இப்படுகொலையின் பின்னணியில் சிரிய உழவுத்துறையினர் காணப்படுவதாகக் கூறி மாற்றுக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட சிரியா எதிர்ப்பு போராட்டங்களும் கிளர்ச்சிகளும் சிரியாவை லெபனானில் இருந்து அந்நியப்படுத்துவதோடு நின்றுவிடாது, 30 ஆண்டுகாலமாக நிலைகொண்ட சிரிய இராணுவத்தினரையும் லெபனானில் இருந்து வெளியேற்றியது. இவையாவும் இஸ்ரவேல் மற்றும் வாஸிங்ரனினதும் நீண்ட நாள் கனவு என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆகவே இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்க, இஸ்ரவேலினுடைய பங்கும் கணிசமானது என ஆய்வாளர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
Post a Comment