மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனாசக்தியின் விழைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நன்று எது தீது எது அன அறியும் நுண்ணிய ஆற்றலே பகுத்தறிவாகும். மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்களை மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பகுத்தறிவின் கருப்பொருள் ஆகும். ஆனால் இந்த சிந்தனாசக்தியும் பகுத்தறிவும் படைத்த மனிதன் சில மூடக்கொள்கைகளை ஏற்று உண்மைக்கும் நீதிக்கும் புறம்பான பாதையில் பயணிக்கின்றான் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.
சிந்தனை என்கின்ற ஒரேயொரு விடயந்தான் மனிதனை இந்த மண்ணிலே வாழுகின்ற விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்துகிறது. ஒரு பறவையை எடுத்துக்கொள்ளுங்கள் அது ஆண்டாண்டு காலமாய் கூடு கட்டினாலும் அதன் வடிவத்திலும் சரி, அளவிலும் சரி ஏதேனும் மாற்றங்களை காணமுடிந்ததா? எல்லா விலங்குகளுக்கும் இதே நிலைதான் ஆனால் மனிதன் மட்டுமே இவற்றில் இருந்து வேறுபடுகிறான். அவனை வேறுபடுத்தி உயர்த்திக்காட்டுவது பகுத்தறிவு என்கின்ற ஒற்றைச்சொல்தான் தோழர்களே. பகுத்தறிவு என்பது மட்டும் இல்லாவிட்டால் மனிதன் இன்று இத்தனை விந்தைகளை நிகழ்த்தியிருக்க முடியாது. ஆகவே உங்கள் சிந்தனைக்கு சிறகளியுங்கள், மூட பழக்க வழக்கங்களை மூட்டை கட்டுங்கள்.
அன்று அறிவியல் கருத்துக்களை வெளியிட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள், தூற்றப்பட்டார்கள். ஆனால் இன்று அறிவியல் வளர ஆரம்பித்து எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்துவிட்டது.
இன்னும் எத்தனை காலத்துக்குதான், கடவுள் இருக்கிறார் கடவுள் தான் எங்களை படைத்தார், கடவுள் தான் எம்மைக்காக்கிறார் என்று ஏமாற்றிக்கொண்டிருக்க போகிறீர்கள். இந்த பிரபஞ்சத்திலே கடவுளை கண்டவர்கள் யாருமே இல்லை. கடவுள் இருப்பதற்கு ஏதேனும் ஆதாரமோ நம்பகத்தன்மையான சான்றுகளோ இல்லை. வேதப்புத்தகங்களையும் மத குருமார் சொல்லும் கருத்துக்களையும் கண்மூடித்தனமாக நம்பு என்றுதான் அனேகமான மதங்கள் வலியுறுத்துகின்றன. ஏன் எதற்கு என்று ஏதேனும் கேள்வி கேட்டால் அது கடவுளின் மீதுள்ள அவநம்பிக்கையை பிரதிபலிக்கும் அல்லது கடவுள் நிந்தனை என்று குற்றம் சாட்டி மனிதனுடைய சிந்தனைகளை மழுங்கடிக்கின்றார்கள் இந்த பார்ப்பானர்கள். கடவுள் மேல் கோயிலின் மேல் அதன் கொள்கை மேல் மதகுருமாரின் மேல் ஆராட்சி கூடாது, மதங்கள் போதிப்பதை நம்பு என்று சொன்னால் ஏனைய விலங்குகளைப்போல் மனிதனுக்கும் மூளை இல்லாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும். அல்லது உங்கள் கடவுள் ஆராயும் எண்ணத்தை மனித மூளையில் இருந்து எடுத்திருத்தல் வேண்டும் அல்லவா? சிந்தியுங்கள் தோழர்களே; அறிவின் முதிர்ச்சியுடன் கூடிய தூய தெளிந்த உண்மையான நாத்திகமே பகுத்தறிவாகும். உன் அறிவை ஒரு எல்லைக்குள் அடக்கிவிடாது, சுதந்திரமாய் எங்கும் பரவவிட்டு, உன் ஆற்றலினால் ஏன், எப்படி என ஆராய்ந்து உன் மனதிற்கு உண்மையை வழங்கு என்று பகுத்தறிவு கொள்கை கூறுகிறது. கடவுள் இல்லை என்று நிரூபிக்க உலகில் எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கின்றன அனால் கடவுள் இருக்கின்றார் என்று நிரூபிக்க உலகில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை உங்கள் சிந்தனைக்கு வித்திடுகிறேன். சிந்தித்து நீங்களே தெளியுங்கள்.
பகுத்தறிவாளர்கள் இல்வாழ்க்கையை இன்பமாகக் கழிக்கிறார்கள், யாரும் அவர்கள் மீது குற்றமும் குறையும் சுமத்த முடியாது ஏனெனில்,
அன்பும் அறனும் உடயைதாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
என்ற வள்ளுவனின் குறளுக்கு இணங்க பொய், களவு, கள்ளுண்ணாமை, சூது, அறமில்லாக்காமம் முதலியவற்றை நீக்கி பிறருக்கு தீங்கில்லாமல் அன்பாகவும் பண்பாகவும் வாழவேண்டும் என்பதே பகுத்தறிவின் மறைபொருள். இறுதியாக சேக்ஸ்பியரின் கருத்தை கூறுகின்றேன்; சிந்தித்துப் பார், நீயே சிந்தித்து முடிவு செய் அந்த முடிவுதான் திறம்பெற்ற திடமுடையதாக இருக்கமுடியும் என்பதை உணர்க. ஆகவே மீண்டும் சொல்கிறேன் விலங்கில் இருந்து மனிதனை வேறுபடுத்துவோம் சிந்தியுங்கள் தோழர்களே! கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என ஆராட்சி செய்ய மறுப்பவன் வெறியன், கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என ஆராட்சி செய்ய முடியாதவன் மூடன், கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என ஆராட்சி செய்ய அஞ்சுபவன் அடிமை, கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என ஆராட்சி செய்து கடவுள் இல்லை என்ற உண்மையை அறிந்து தெளிபவன் பகுத்தறிவாளன்.
நன்பரே,நல்லதொரு பதிவு. ஆத்திகர்கள் மூடர்களையும் அயோக்கியர்களையும் தான் நம்புகிறார்கள். அவர்கள் பகுத்தறிவாளர்களை ஏளனமாக பார்க்கிறார்கள். பகுத்தறிவாளிகள் தான் தெளிந்த தொலை நோக்கு சிந்தனையுடையவர்கள் என்பதில் எந்த மற்றுக்கருத்தும் கிடையாது.
நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள் வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை யாதெனில் .. சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் . சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் . சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் . சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் . சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .
உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல் கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக் கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளை விளையாட்டு ....
குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.
திருக்குறளை மேற்கோள் காட்டும் இவர்கள் கபட வேடதாரிகள். பொய்யாமொழிப்புலவன் தமிழறிஞன், வள்ளுவன் எடுத்தியம்பிய கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய அதிகாரங்களை பின்பற்ற இயலாத மிருகங்கள் இவர்கள்.
3 comments:
நன்பரே,நல்லதொரு பதிவு. ஆத்திகர்கள் மூடர்களையும் அயோக்கியர்களையும் தான் நம்புகிறார்கள். அவர்கள் பகுத்தறிவாளர்களை ஏளனமாக பார்க்கிறார்கள். பகுத்தறிவாளிகள் தான் தெளிந்த தொலை நோக்கு சிந்தனையுடையவர்கள் என்பதில் எந்த மற்றுக்கருத்தும் கிடையாது.
சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .
உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....
குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.
See this site :
http://www.vallalyaar.com/
திருக்குறளை மேற்கோள் காட்டும் இவர்கள் கபட வேடதாரிகள். பொய்யாமொழிப்புலவன் தமிழறிஞன், வள்ளுவன் எடுத்தியம்பிய கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய அதிகாரங்களை பின்பற்ற இயலாத மிருகங்கள் இவர்கள்.
Post a Comment