எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத்தமிழ் என்று சங்கே முழங்கு என்று ஈராயிரம் ஆண்டுக்கு மேலாக வீர முழக்கம் இட்ட ஒரு இனம் தனது தொன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய மரபுகளை தன்னகத்தே கொண்டுள்ள கலப்புக்கள் அற்ற தூய மொழியாக பல்லாயிரம் கல்வெட்டுக்களை வரலாற்று சான்றுகளாக பறைசாற்றி மங்காத புகழோடு வானுயர்ந்து வளர்ந்து சிறந்து விளங்குகின்ற தனது தாய்மொழியாகிய தமிழ் மொழியை இழக்கப்போகிறதே என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் இன்றைய கவலை.
மொழி ஆய்வாளர்களின் கருத்து
உலகில் பெரும்பாலன மொழிகள் தனது இறுதிக்காலத்தை நெருக்குகின்றன என்பதுதான் மொழியியல் வல்லுனர்களின் எச்சரிக்கை. இன்றைக்கு உலகிலே வாழ்கின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளையும் பேசுகின்றார்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்த ஆறாயிரம் மொழிகளில் அறுநூறு மொழிகள் மாத்திரமே எஞ்சியிருக்கும் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிகிறது என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கூற்று. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகிறார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்து மொழிகளை வெறும் பத்து பேர் மட்டுமே பேசுகிறார்கள். மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு இனத்தினுடைய அல்லது பழங்குடி மக்களின் மொழிகளே அதிக அளவில் அழிவடைவதாக மற்றொரு தகவல் கூறுகின்றது.
தமிழ் மொழியின் போக்கு
உலகெங்கும் வியாபித்துள்ள ஆறரைக் கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை உள்ளடக்கி உலகில் அதிகமான மக்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் பத்தொன்பதாவது இடத்தில் உள்ள தமிழ் மொழி இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அழியப்போகிறது என்பதறியாது இன்னும் எம்மில் பலர் வாழ்கிறார்களே என்பதுதான் மிக வருத்தமான செய்தி. ஒரு மொழி அழிவடையத் தேவையான அடிப்படைக் காரணிகளை தமிழ் மொழியும் பெற்றுவிட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
· மொழி, இன ரீதியான ஒடுக்குமுறைகள்
· அந்நிய மொழிகளின் ஊடுருவல்
· வட்டார பேச்சு வழக்குகள்
· அந்நிய நாகரிக வளர்ச்சி மோகங்கள்
போன்றன ஒரு மொழியின் அழிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அன்னிய மொழியின் ஆக்கிரமிப்புக்கள் தமிழில் ஆழமாக ஊடுருவி அழித்து கொண்டிருக்கின்றன. சான்றாக தமிழ் மொழியா அல்லது பிற மொழியா என்று எமக்கு தெரியாத அளவிற்கு அன்னிய மொழிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அன்னிய மொழிகள் தமிழில் இன்று நேற்று ஊடுருவியவை அல்ல. ஆதி முதல் ஆக்கிரமிக்கப்பட்டவை. குறிப்பாக வடமொழி, அதுவும் ஊடுருவியது என்று சொல்லமல் ஆக்கிரமிக்கப்பட்டது என்று சொல்வது சாலப் பொருந்தும். வடமொழிப்பார்ப்பனர்கள் மதம் என்ற போர்வையில் புராணங்கள், சுலோகங்கள் ஆதாரங்காட்டி ஊர்கள், கோவில்கள், குளங்கள், ஆறுகள் என்பவற்றின் பெயர்களை வடமொழிக்கே மாற்றினார்கள். மத நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த சோழ மன்னர்கள் புராண்ங்களோடு சேர்த்து புனைந்து சூழ்ச்சி செய்து தம்வசப்படுத்திக் கொண்டனர். அத்தோடு நின்றுவிடாது தாங்களே மேலான சாதி அந்தணர் என்றும் மற்ற அனைவரும் தமக்கு கீழ் என்றும் கூறினர். மன்னர்களும் இவர்களுக்கு செய்யும் சேவை சமயத்திற்கே செய்யும் சேவை என்றெண்ணி வசதி வாய்ப்புக்களை தாராளமாக வழங்கினார்கள்.
இவர்கள் மதத்தை வளர்ப்பதோடு நின்று விடாது வடமொழியையும் வளர்த்தனர். தமிழ் மொழியை அழித்தனர். தமிழ் ஒலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும் கார்த்திகை தீபத்தன்று நெருப்பிலும் இடுவது புண்ணியம் என்று கூறி பல்லாயிரம் சுவடிகளை அழித்தனர். இவ்வாறு இவர்களின் அநியாயங்கள் தொடர்ந்து கொண்டிருக்க அக்காலத்தில் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் முதலானோர் வடமொழிச் சொற்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர்.
இவ்வாறு வடமொழியால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மொழியானது போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பின் போது மீண்டும் அந்நிய மொழி ஊடுருவலுக்கு உள்ளானது. ஆங்கில மொழியின் ஆதிக்கமானது எல்லா மொழிகளையும் போல் தமிழ் மொழியிலும் மிதமிஞ்சி கிடக்கிறது. இன்றைய நாகரிக வளர்ச்சியும் மேற்கத்தேய மோகமும் இளந்தலைமுறையினரை ஆங்கிலத்தின் பக்கம் ஈர்க்கிறது. ஒருவனின் ஆங்கிலப் புலமையே அவனது அறிவுத்திறமையாக கணக்கிடப்படுகின்றது. தனியார் கற்கை நெறிகள், உயர் கல்விகள், பட்டப்படிப்புக்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே நடைபெறுகின்றன. பிறகு எப்படி தமிழ் மொழிக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு? இதனால்தானோ தெரியவில்லை, தமிழன் தன் பெருமையை மறந்து ஆங்கில மொழியை பேசுகிறான். ஆங்கிலம் கலந்த தமிழ் பேசாதவர்கள் நாகரிகம் அற்றவர்கள் என்று கருதும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம் என்று ஒரு கவிஞன் கவலையோடு பாடினான்;
தமிழன் தாய் பெயரோ மம்மி
அவன் நாய் பெயரோ யிம்மி
வருந்தி நான் அழுகிறேனே விம்மி விம்மி...
வட்டார மொழிகளின் வழக்கு புதிய மொழித் தோன்றல்களை உருவாக்கக்கூடியவை. வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் வேறுபட்ட சொல் வழக்குகளை கொண்டிருக்கின்றனர். இவர்கள் வட்டார இலக்கணங்களை தோற்றுவிக்க நேர்ந்தால் அது புதிய மொழித் தோன்றலுக்கு இட்டுச் செல்லும். மேலும் நகர்புறங்களில் வாழ்பவர்கள் ஆங்கில மொழியினதும் அல்லது புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் தத்தமது பிரதேச பெரும்பான்மை மொழியினதும் ஆதிக்கத்தால் காலப்போக்கில் தமிழின் தனித்துவத்தை இழக்கின்ற பரிதாப நிலை ஏற்படலாம்.
தமிழ் மொழி அழிகிறது ஒழிகிறது என்று எப்படித்தான் கத்தினாலும் கதறினாலும் எம்மில் சிலர் இதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. மொழி என்பது தொடர்பாடலை ஏற்படுத்துகின்ற ஒரு சாதனம் என ஒரே வரியில் முடித்து கொள்வார்கள்.
ஆதி மனிதன் எவ்வாறு படிப்படியாக பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு உயர்ந்து நிற்கின்றானோ அதே போல் சைகை மூலமாக தொடங்கி பேச்சு ரூபம் பெற்று எழுத்துருவம் கண்டு இலக்கண இலக்கியம் படைத்து ஒவ்வொரு இனமும் தனது பண்பாடு கலாச்சாரத்தோடு பிண்ணி பிணைந்து உருவாக்கியதே மொழியாகும். ஒரு மொழியின் அழிவு என்பது ஒரு இனத்தின் அழிவை போன்றதாகும். ஆறரைக் கோடி பேர் இருக்கிறோமே பிறகெப்படி தமிழ் அழிந்துவிடும் என சனத்தொகையை காரணங்காட்டி நாம் நீண்ட காலத்திற்கு இறுமாப்போடு இருந்துவிட முடியாது. தமிழ் அழிவதற்கான சகல காரணிகளும் ஏற்கனவே தோற்றம் பெற்றுவிட்டன. ஆகவே தமிழையும் தமிழனையும் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனின் கைகளிலும்தான்.
தமிழர்கள் சந்தித்தால் கலப்பற்ற தமிழ் பேசுவோம்
பிற மொழியையும் கெளரவப்படுத்துவோம்
தமிழ் மொழியையும் வாழ வைப்போம்.
Alivetamil blog
3 comments:
அழகான கட்டுரை
ஆயிரம் கதைசொல்லுகிறது.
தமிழர்களை காண்கையில் தமிழ் பேசுங்கள்
என்று நெஞ்சில் அறைவதுபோல் உள்ளது.
நம்மவர்கள் கேட்பார்களா?
மலையாளிகள் தம்மவரை எங்கு எப்படி எந்த நிலையில்
எப்படிப்பட்ட தகுதியில் இருந்தாலும் மலையாளத்தில் தான் பேசுவார்கள்.
தனிப்பெரும் தகுதியுடைய மொழிகொண்ட நமக்கு ஏன் அந்த எண்ணம் இல்லை.
வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் பேசுவோம்
மொழி காப்போம்.
அன்பன்
மகேந்திரன்
http://www.ilavenirkaalam.blogspot.com/
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(S'inscrire à ce site
avec Google Friend Connect)
பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ஐததழ
Post a Comment