ஐரோப்பாவில் 1918 ஆம் ஆண்டு முதலாம் உலகயுத்தத்தின் பின் யுகோஸ்லாவியா என்ற ஒரு கூட்டு ஆட்சி அமைக்கப்பட்டது. அதில் பொஸ்னியா, மொன்ரிநிக்ரோ, ஸ்லோவேனியா, க்ரோஷியா, மாசிடோனியா ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன.
1946 ஆம் ஆண்டு யுகோஸ்லாவியா ஆனது கம்யூனிச வழிகாட்டலில் தனக்கான அரசியல் கட்டமைப்பை நிறுவியது. மக்களுடைய ஆதரவையும் வொன்றெடுத்தது. அதன் பிற்பாடு வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளால் யுகோஸ்லாவியா பல கூறுகளாகச்சிதறியது.
1991ல் க்ரோக்ஷியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியன தம்மை சுதந்திர நாடுகனாக அறிவித்தன. அதனை தொடர்ந்து பொஸ்னியாவும் சுதந்திர பிரகடனம் செய்ய எத்தனித்து. அப்பொழுதுதான் பிரச்சனை வெடித்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னராக ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை என வரலாற்று ஆய்வாளர்களால் பதியப்படுகிறது.
ஸ்லோவேனியாவில் இசுலாமியர்கள் 40%, சிறுபான்மையிராக கிரேக்க பின்னணி கொண்ட சேர்பியர்கள் 32%, க்ரோட்கள் 18% என்ற விகிதாசார அடிப்படையில் மக்கள் தொகை காணப்பட்டது. இந்த 40 விழுக்காடுகளைக்கொண்ட இசுலாமியர்கள் சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார்கள். இதனை எதிர்த்து சிறுபான்மை இனமான கிரேக்க பின்னணி கொண்ட சேர்பியர்கள் இனப்படுகொலை ஒன்றை முன்னெடுத்தார்கள். இவர்களுக்கு பக்கபலமாக அயல்நாடான சேர்பியா கைகொடுத்தது.
இந்த இனப்படுகொலையானது பொஸ்னிய சேர்பிய இராணுவத்தால் (Bosnian Serb Army) முன்னெடுக்கப்பட்டது. பொஸ்னியாவில் இருந்து முஸ்லீம்களையும் குரேஷியர்களையும் இனச் சுத்தீகரிப்பு செய்யும் நோக்கில் சேர்பியர்கள் கடும் தாக்குதல்களை நடத்தினார்கள். நிலப்பரப்புகளை கைப்பற்றுவதை விடவும் இன அழிப்பினையே அவர்கள் பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டமைக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டு மாதங்களில் பொஸ்னியாவின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பகுதியை சேர்பியர்கள் தம்வசப்படுத்தினார்கள். இவற்றை எல்லாம் வழமை போல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன உலக நாடுகளும் ஐ.நா. மன்றமும். இனப்படுகொலை உச்சக்கட்ட நிலையடைய அமெரிக்காவின் தலையீட்டினால் ஐ.நா. அமைதிப்படைகள் வரவழைக்கப்பட்டன. இதன் பின்னர் ஏற்பட்ட கோரமான ஒரு இனப்படுகொலையை ஐ.நா. படைகள் தடுக்கவில்லை. 1995 ஆம் ஆண்டு ஒரே இடத்தில் 8000 பேர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய படைத்தளபதி ராட்கோ மிலாடிச் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சர்வதெச நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். சர்வதேச காவற்துறையினருடைய கண்ணிலே படாமல் தலைமறைவாக வாழ்ந்த இவர் மே மாதம் 16 ஆம் திகதி சேர்பிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அத்தோடு இப்படுகொலையுடன் தொடர்புடைய பொஸ்னிய சேர்பிய தலைவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது நினைவில் இருக்கலாம்.
காலம் கடந்தேனும்
ஞாலம் நீதி காணும்
Alivetamil blog
0 comments:
Post a Comment