அளவுமாற்றம்பண்புமாற்றம்அடைதல்என்பதுஅளவில்ஏற்படுகின்றமாற்றமானதுஒருகட்டத்திற்குமேல்பண்பில்மாற்றத்தைஏற்படுத்துகின்றது. எளிமையானஉதாரணம்நீர்கொதித்தல். முதலில்வெப்பநிலைமாற்றம் (அளவுமாற்றம்) பின்னர் 100 பாகைCஐஅடைந்தவுடன்பண்புமாற்றம்அடைகிறது. அடிமைசமுகத்தில்ஏற்பட்டஅளவுமாற்றம்நிலப்பிரதிநிதித்துவம்என்றபண்புமாற்றத்தைஏற்படுத்தியது. மனிதன்ஒருசெயலைசிந்தித்துக்கொண்டிருக்கும்பொழுதுஅதுஅளவுமாற்றத்தைஏற்படுத்துகிறது. ஒருகட்டத்திற்குமேல்அவன்செயலில்இறங்கும்பொழுதுஅதுபண்புமாற்றத்தை குறிக்கும்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம்(Historical Materialism)
இயக்கவியல் விதிகளை மனித சமுதாய வரலாற்று மாற்றங்களுக்கு பிரயோகிப்பதே வரலாற்றுப் பொருள் முதல் வாதம் எனப்படுகிறது. ஆதியில் வாழ்ந்த பொதுவுடமை சமுதாயம், அடிமை சமுதாயம், நில பிரதிநிதித்துவ சமுகம், முதலாழித்துவ சமுகம், ஆகியவற்றை எடுத்து இயக்கவியல் கோட்பாடுகளுக்கு உட்படுத்தி ஒன்றில் இருந்து இன்னொன்று மாறி வந்துள்ளது என்பதை கால் மார்க்ஸ் விளக்கினார்.
ஒவ்வொரு சமுதாயமும் அதன் உள்முறன்பாடுகளால் அல்லது பிரச்சனைகளால் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன(வளர்ச்சியடைகின்றன). இந்த மாற்றம் ஒரு கட்டத்துக்கு மேல் பண்புமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.படைக்கப்பட்ட புதிய சமுதாயம்தனக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்கின்றன, தேவையற்றவற்றை தவிர்க்கின்ற்ன. இதுவே மார்க்சியம் கூறும் மெய்யியலின் சாரம்சமாகும். ஆகவே மாக்சியத்தின் இயக்கவியல் கோட்பாட்டினால் சமுதாய மாற்றத்தின் பாதையை விளக்கவும் எதிர்காலத்தில் முதலாழித்துவ சமுதாயத்தில் ஏற்பட இருக்கின்ற பண்பு மாற்றத்தை எதிர்வு கூறவும் முடியும்.
மேலும் தொழிலாளிகளின் வியர்வையில் குளிர்காயும் இக்கால முதலாழித்துவ சமுதாயத்தினால் ஏற்படுகின்ற முரண்பாடுகளினாலும் பிரச்சனைகளினாலும் ஏற்படுகின்ற அளவு மாற்றம் ஒரு பண்பு மாற்றத்தை ஏற்படுத்தி புதியதோர் சமுதாயத்தை தோற்றுவிக்கும் என்பது உறுதி.
4 comments:
மார்க்கசீயம் பற்றிய அருமையான
கருத்து விளக்கம்.
நன்றி சகோ
- Tamilpriyan -
arumai
Please provide your contact.
Arun agest3@gmail.com 9003870666
Post a Comment