மருத்துவர்களின் அயராத உழைப்பு தமிழ் சினிமாவின் விசேட நட்சத்திரம் ரஜனிகாந்தை பாரதூரமான நோய்களில் இருந்து காப்பாற்றி தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கவைத்தது. தற்சமையம் உடல் நிலை நன்கு தேறியதால் ரணா திரைப்பட விவாதங்களில் ரஜனி மீண்டும் இறங்கியுள்ளார்.
அவர் தன்னுடைய வேலையை/கடமையை சரிவர செய்யிறாரு ஆனா நாம அப்படியா இருக்கிறோம்? சினிமாவை பார்த்தோம், ரசித்தோம் என்று நின்றுவிடாது அவர்களை தூக்கி தலையில் வைத்தெல்லவா ஆடுகிறோம். ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் எல்லாம் வேற்று மொழி சினிமாக்களில் காணப்பட்டாலும், இந்த கிறுக்கு பிடித்த ரசிகர் கூட்டம் தமிழ் சினிமாவிற்கு மட்டுமே உரித்தான சொத்தாக விளங்குகிறது.
இல்லாவிட்டால்...
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றொரு செய்தி வந்ததும், அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கிவிட்டனர்; சரி ஒரு மனிதாபிமானம்,,இயற்கை,,என்று வைத்துக்கொள்வோம்.
பல ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டார்கள்; சரி இதையும் குறைகூறவேண்டாமே,,
இவற்றை எல்லாம் தாண்டி ஒரு ரசிகன் துயர் தாங்கமுடியாது தற்கொலை செய்துகொள்கிறான்.
ஊத்துக்கோட்டை அருகே பால்ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி வெங்கடேசன் (வயது 29) அந்த பகுதி ரஜினிமன்ற கிளை செயலாளராக இருந்தார். இவர் ரஜினி உடல்நிலை பற்றிய செய்தியால் வேதனை தாங்காது தற்கொலை செய்து உயிரை மாய்த்தார். என்ன நடக்கிறது நாட்டில்?
இதைவிட கொடுமை; புதுப்பட வெளியீடுகளின் போது அலகு குற்றுதல், காவடி எடுத்தல், மண்சோறு உண்ணுதல் போன்ற மூடத்தனமான செயல்களை சில ரசிகர்கள் செய்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் ஊக்கமளிப்பதைப்போல சில ஊடகங்கள் இவற்றை பெரிது படுத்தி செய்தி வெளியிடுகின்றன, குறிப்பாக தயாரிப்பாளர்களின் பின்னணி கொண்ட ஊடகங்கள் இது போன்ற செய்திகளை விளம்பர உத்தியாக கையாளுகின்றன.
தமிழ் சினிமா இது போன்ற கிறுக்குப்பிடித்த ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பதால் தான், ஒரு குறுகிய வட்டத்திற்கிள் இருந்து மீழ முடியாமல் இன்னும் மட்டமான படங்களையே தருகிறது (ஆங்காங்கே சில நல்ல படங்கள் வருவதையும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்).
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதற்கப்பால் மக்கள் எதையுமே செய்யக்கூடாது.
பாலூத்துதல், கட்டவுட் அடித்தல், ரசிகர் மன்றங்கள் இதெல்லாம் எதற்கு?
நடிகர்களா உனக்கு சோறு போடுவார்கள்? பெத்த தாய்க்கு ஒரு கோப்பை தேனீர் கொடுக்க வக்கில்லை, நடிகர் படத்திற்கு பால் ஒரு கேடா? நடிகர்களா இளைஞர்களின் வழிகாட்டி? பிறகெதற்காக நடிகர்கள் பின்னார் அணிதிரளுகிறாய்(ரசிகர் மன்றங்களூடாக)? நடிகர்கள் இவற்றிற்கு மறைமுகமாக ஊக்கமளிக்கிறார்கள் தாங்கள் நன்மை அடைவதற்காக. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே.. யாராவது ஒரு நடிகன் இவற்றை கண்டித்ததுண்டா?
இவர்களுக்கு வாழ்க்கை அளித்தவர்கள் நாங்கள். எங்களால் சினிமாவில் வெற்றியடைகிறார்கள் இவர்கள் ஆனால் நாங்கள் இது போன்ற கிறுக்குத்தனமான செயற்பாடுகளால் வாழ்க்கையில் தோல்வி அடைந்து நிற்கின்றோம். நடிகர் பிழைத்துவிட்டார், ரசிகன் இறந்துவிட்டான்; நோய்வாய்ப்பட்டது நடிகரா? ரசிகரா(சமூகமா)?
Alivetamil blog
0 comments:
Post a Comment