எந்த வர்க்கம் சமுதாயத்திலுள்ள ஏதேனுமொரு மூலதனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் தனது வாழ்க்கைக்கான தேவைகளைப் பெறாமல், தனது உழைப்பை விற்பதன் மூலம் அவையனைத்தையும் பெறுகின்றதோ, அதுவே பாட்டாளி வர்க்கமாகும். எந்த வர்க்கத்தின் சுகமும் துக்கமும், வாழ்வும் சாவும், ஏன் வாழ்க்கை முழுவதுமே, உழைப்பிற்கான தேவையினை சார்ந்தாகவும், அதன் காரணமாக, தொழில் நன்கு நடக்கும் காலத்தையும் தங்கு தடையற்ற போட்டியின் விளைவாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சார்ந்ததாகவும் இருக்கின்றதோ அந்த வர்க்கம் தான் பாட்டாளி வர்க்கமாகும். சுருங்கக்கூறினால் பாட்டாளி வர்க்கம் என்பது 19 ஆம் நூற்றாண்டு கண்டெடுத்த தொழிலாளி வர்க்கமாகும் என வரையறை செய்கிறார் பிரடெரிக் எங்கல்ஸ்.
பாட்டாளி வர்க்கம் எவ்வாறு தோற்றம் பெற்றது?
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில்புரட்சியினூடே பாட்டாளி வர்க்கம் தோற்றியது எனலாம். இத்தொழில் புரட்சி உலகத்திலுள்ள ஏனைய விருத்தியடைந்த நாடுகளுக்கும் பரவலாயிற்று. இத்தொழில் புரட்சியானது, நீராவி இயந்திரம், பல்வேறு நுட்ப இயந்திரங்கள், விசைத்தறி இவற்றை தொடர்ந்து இதர பல்வேறு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் தோன்றியது. இந்த இயந்திரங்கள் விலை உயர்வாக இருந்தமையால் பெரும் முதலாழிகள் மட்டுமே இவற்றை வாங்க முடிந்தது. இவ்வகை இயந்திரங்கள் முந்தைய உற்பத்தி முறையை மாற்றியமைத்ததோடு அவ் உற்பத்தி முறையோடு தொடர்புடைய தொழிலாளர்களையும் வெளியேற்றியது. ஏனெனில் இவ் இயந்திரங்கள் பொருட்களை தரமாகவும் லாபகரமாகவும் உற்பத்தி செய்தன. இந்த இயந்திரங்கள் தொழில்கள் அனைத்தையும் பெரும் முதலாழிகள் கைகளில் ஒப்படைத்ததோடு தொழிலாளர்களின் சாதாரண உடமைகளான கருவிகள், கைத்தறிகள் ஆகியவற்றையும் பயனற்றதாக செய்தன. எனவே வெகுவிரைவிலேயே முதலாழிகள் அனைத்தையும் தங்களது உடமைகளாக்கி கொண்டார்கள், தொழிலாளர்களுக்கு எதுவும் எஞ்சவில்லை. சமுதாயவளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களை பொறுத்து உழைக்கும் வர்க்கங்கள் சொத்துடைய, ஆளும் வர்க்கங்களோடு பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு வகையான உறவுகளை வைத்துக்கொண்டு பண்டைக்காலத்தில் உழைக்கும்வர்க்கம் (பல பிற்பட்ட நாடுகளில் ஏன், அமெரிக்காவின் தென்பகுதியிலும் கூட இருப்பதைப் போலவே) எஜமானார்களில் அடிமைகளாக இருந்தார்கள். மத்திய காலத்தில் நிலப்பிரபுக்களின் பண்ணையடிமைகளாக இருந்தார்கள். படிப்படியாக உற்பத்தி வளர்ச்சியடைந்த போது, பெருமுதலாழிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்ட உற்பத்தி முறைத் தொழிலாளிகள் தோன்றினார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சிகளும் அவற்றைக்கையாளும் முதலாழித்துவத்தினது அடக்குமுறைகளும் பாட்டாளி வர்க்கத்தினரது இறுதித்துளி இரத்தத்தினையும் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த சமயத்தில்தான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான கோட்பாடுகளை முன்வைத்து கம்யூனிசம் தோற்றம்பெற்றது.
0 comments:
Post a Comment