உயர் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்லவேண்டிய நிற்பந்தம், இவ்வளவு காலமும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன் முதல் முறையாக பெற்றோரை பிரிந்து செல்லுகின்றான். அவனுக்கு எதை கொண்டு செல்லவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றம். எப்படியான ஆடைகளை தெரிவுசெய்வது? இதுவரை படித்த நூல்கள் ஏதேனும் தேவைப்படுமா? புதிய மொழி, கலாச்சார அமைப்புக்கொண்ட பிரதேசத்தில் எப்படி சவால்களை எதிர் கொள்வது? போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனது ஆழ் மனதில் எழுந்தன. அதற்கு அவனுடைய தந்தை புறப்படும்பொழுது அவனுக்குஒரு திருக்குறள் நூலை கொடுத்து மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே கூறி வழியனுப்பினார் புதிய கலாச்சாரம், புதிய வாழ்க்கை நெறிகள் வென்றுவா மகனே!. கூடி நின்ற நண்பர்களுக்கு ஓர் ஏழனச்சிரிப்பு, காரணம் அவனது கற்கை நெறி கணிதத்துறை சார்ந்தது இவர் என்ன திருக்குறளை கொடுத்தனுப்புகிறாரே..
ஆம் தோழர்களே சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்.எந்த ஊர், எந்த நாடு, எந்த இனம் எல்லாவற்றையும் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துகின்ற உயிர் கொண்டது திருக்குறள்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது. இத்தகைய அரும் நூலை நாம் எந்த அளவிற்கு உதாசீனம் செலுத்துகிறோம் என்பதை ஒரு கவிஞன் வேதனையோடு பதிவு செய்கிறான்.
இந்துக்களின் வீடுகளிலே தேவார, சமய நூல் இருக்கிறது
இசுலாமியன் வீடுகளில் குர்ரான் இருக்கிறது
கிறிஸ்தவன் வீடுகளில் வேதாகமம் இருக்கிறது
எல்லோருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய திருக்குறள் நூலகத்திலே இருக்கிறது.
திருக்குறளின் பெருமை கேளீர்!
தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்
- கபிலர் -
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து
-பரணர் -
உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய் மொழி மாண்பு
-மாங்குடி மருதனார் -
பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய்யல்லாத
மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே _ முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால்
வையத்து வாழ்வார் மனத்து.
- தேனிக்குடி கீரனார் -
வள்ளுவன் உணர்த்தும் வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிப்போர் எங்கு போனாலும் எங்கு வாழ்ந்தாலும் அறன் தவறிச்செல்லார் என்பது திண்ணம்.
அசத்தல் வரிகள் நண்பரே.. சரியான சாட்டையடி.. //இந்துக்களின் வீடுகளிலே தேவார, சமய நூல் இருக்கிறது இசுலாமியன் வீடுகளில் குர்ரான் இருக்கிறது கிறிஸ்தவன் வீடுகளில் வேதாகமம் இருக்கிறது எல்லோருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய திருக்குறள் நூலகத்திலே இருக்கிறது.//
3 comments:
அசத்தல் வரிகள் நண்பரே..
சரியான சாட்டையடி..
//இந்துக்களின் வீடுகளிலே தேவார, சமய நூல் இருக்கிறது
இசுலாமியன் வீடுகளில் குர்ரான் இருக்கிறது
கிறிஸ்தவன் வீடுகளில் வேதாகமம் இருக்கிறது
எல்லோருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய திருக்குறள் நூலகத்திலே இருக்கிறது.//
வணக்கத்துடன்...
சம்ப்த்குமார்.B
http://parentsactivitytamil.blogspot.com
super... nalla pathivu.. anaivarathu illaththilum irukka vendiya puththakam... vaalththukkal
தமிழுக்கு கிடைத்த ஒரு அசையாச் சொத்து
பொய்யாமொழிப் புலவர் அருளிய உலகப் பொதுமறை நூல்
பதிவு அருமை.
http://www.ilavenirkaalam.blogspot.com/
Post a Comment