வந்தாரை வாழவைக்கும் தமிழகமல்லவா? தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும் தமிழர், கடினமான உச்சரிக்க முடியாத வடமொழிச் சொற்களையும் கூறி மகிழ்ந்தனர். "மனம்" என்பது தமிழ்ச்சொல்; வடமொழியில் "ஹ்ருதய" எனக்கூறப்படும். வடமொழியை உச்சரிப்பது மிகக் கடினமானதாகும். அதற்கு முயற்சி அதிகம் தேவை. வாய், உதட்டளவில் தமிழை உச்சரிக்கும் நாம் வடசொல்லை உச்சரித்தால் அடிவயிற்றிலிருந்து முயலல் வேண்டும்.
தொல்காப்பியர் நாட்டில் மக்கள் வழங்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தார். அவர் சொற்களை "இயற்சொலல்", "திரிசொல்", "திசைச்சொல்" எனப் பிரித்தார். வழங்கிய சொற்கள் பல இம்மூன்று பகுப்பில் அடங்கவில்லை. "வடசொல்" என்று நான்காவதாக ஒன்றை வகுத்தார். வடசொற்களைத் தமிழில் எவ்வாறு உச்சரிக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார், "வடமொழிச் சொற்களை வடமொழி எழுத்துக்களைக் கொண்டே ஒலிக்காதீர்கள்; வடமொழி எழுத்துக்களை நீக்கி இணையான தமிழ் எழுத்துக்களில் உச்சரியுங்கள்" என்கிறார் தொல்காப்பியர். "ஹ்ருதய" என்பதை "இதயம்" என்று கூறுங்கள். "பங்கஜம்" என்பதைப் "பங்கயம்" என்று கூறுங்கள் என்கிறார் தொல்காப்பியர்.
என்பது தொல்காப்பிய நூற்பா, அவருக்குப் பின்வந்த நன்னூலார், இரண்டு வடமொழிச் சொற்களை இணைத்து எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுத்தார். "இராமன் + அயனம் = இராமாயணம்" என்பன போன்ற "வடமொழிப்புணர்ச்சி" விதி கூறுகிறார் நன்னூலார் பவணந்தி முனிவர்! இலக்கியத்திலும் அம்மொழி புகுந்துவிட்டதே காரணம்.
தொல்காப்பியத்€த்ப் பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பாடம் நடத்தினர். உரையாசிரியருடைய மாணவர்கள் கேட்டனர்; "ஐயா, திசைச்சொல் என்றால் எல்லாத் திசைகளிலும் இருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் என்று கூறுனீர்கள். வடக்கும் ஒரு திசைதானே அப்படியானால் வடசொல்€ல் திசைச்சொல்லுக்குள்தானே அடக்க வேண்டும். வடசொல் எனத் தனியாகக் கூறியது தவறல்லவா?" என்பது மாணவன் வினா.
தொல்காப்பியர் "வடசொல்" என வகுத்துவிட்டனர். உரையாசிரியர் அதைத் தவறென்று எவ்வாறு கூறமுடியும். மாணாக்கனுக்கு உரையாசிரியர் வலிந்து பின்வருமாறு கூறுகிறார். அவரால் மாணாக்கன் கேட்டது தவறென்று கூற முடியவில்லை. அவருக்கும் அது தவறென்று தெரியும்!
"மாணாக்கனே! நீ சொல்வது முற்றிலும் சரி. வடசொற்களைத் திசைச்சொல்லில்தான் அடக்கியிருக்க வேண்டும். ஆனால் நமக்கெல்லாம் ஆசிரியராகிய தொல்காப்பியர் "வடசொல்" என்று தனியாக வகுத்தது ஏன் தெரியுமா?
1. வடக்கு ஒரு புண்ணிய திசை
2. வடமொழி தேவ பாசை
3. வடமொழி எல்லாத் தேசத்துக்கும் பொது
ஆகையால் வடசொல்லைத் திசைக் சொல்லில் அடக்காது "வடசொல்" எனத் தனியாக நம் ஆசிரியர் தெல்காப்பியர் வகுத்தார் என்று மாணாக்கனுக்கு ஆசிரியர் கூறினார். அதைத் தவறு என்று கூற ஆசிரியருக்குத் துணிவு இல்லை. இம்மூன்று பொய்யையும் வடவர் பரப்பியிருந்தனர்.
அங்கிங்கெனாதபடி எங்கும் வடமொழி ஆதிக்கம் புகுந்தது. "மன்னன் எவ்வழி; குடிமகள் அவ்வழி" என்பதறிந்து அரண்மனையை வடமொழி ஆழிப்பேரலை தாக்கியது. மன்னர்கள் அதற்கு ஆட்பட்டனர். மன்னர்களைத் தம்வசப்படுத்தப் பல குறுக்கு வழிகளையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
சோழரிடம் சென்று வடமொழியாளர் கதையளக்கத் தொடங்கினர், "சோழனே உனக்குத் தெரியுமா? உன் வம்சமே சூரியனிடமிருந்து தோன்றியது. உலககெலாம் ஒரு சூரியன்; உலகுக்கு நீயே ஒரு தனி மன்னன். சூரியன் மகன் மனு; அவன் நீ ஆட்சி செய்யத்தான் "மனு நீதியை" எழுதியுள்ளான். மனு உன் முன்னோர். இட்சுவாகு, புரஞ்சயன், காகுத்தன் என்று பல மாவீரர்கன் உன் வழியினர் உனக்குத் தெரியாதா? உன் புலிக்கொடியில் இருப்பது புலி அல்ல; தேவேந்திரன் என்றனர். நம் அரசர்கட்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. "ஆம்" என்று தலையாட்டி "ஆகா" என்று போற்றிப் புகழ்ந்தனர். அக்கரையிலிருந்து வந்த பச்சைப் பாம்பை பாம்பென உணராமல் "பசுமை" என்று கண்டு மகிழ்ந்தனர். தம் இலக்கியங்களிலும், மெய்க்கீர்த்திகளிலும் அப்புனை கதையை எழுதினர்.
அரசன் ஆதரவோடு வடமொழியாளர்கள் தங்கள் வரிசையைக் காட்டினர். பல புனைகதை புனைந்தனர். தஞ்சைக்குப் பக்கத்தில் "வெண்ணாறு" காவிரியின் பாசன ஆறு. "விண்ணை" என்ற சோழ அரசியல் தலைவன் உருவாக்கியதால் அது "விண்ணன் ஆறு" "விண்ணாறு" என்று கூறப்பட்டது. தமிழன் வெட்டிய ஆற்றுக்கு ஒரு கதை கட்டினர் வடமொழியாளர்கள்.
ஒருமுறை தென்திசை வந்த காமதேனு பாலாய்ச் சொரிந்தது. அந்தப்பால் தேங்கி, தயிராகி, வெண்ணை உண்டாகி அந்த வெண்ணைய் ஆறாய்ப் பெருகிறது. அதனால் அது "வெண்ணையாறு" ஆயிற்று. வெண்ணை வெண்ணையாக ஓடுவதால் இது "சுவேதநதி" ஆயிற்று. இதோ புராணத்தில் பாருங்கள்: என்று சில சுலோகங்களைக் கூறினர். ஆற்றின் வரலாற்றை மறந்த மக்கள் புராணப் பொய்யை நம்பினர்.
புறநானுறு பாடப்பட்ட காலத்திலேயே,
"நின் முன்னோர் எல்லாம்
பார்ப்போர் நோவன செய்யலர்"
"பார்ப்பார்க்கு அல்லது பண்பு அறிகிலையே"
என்று அரசரை வடவர் புகழ்ந்து பெற வேண்டியதைப் பெற்றனர்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று எண்ணிய தமிழரை,
"வேற்றுமை தெரிந்த நாற்பால்" என நம்ப வைத்தனர்.
பார்ப்பனரே முதல் வருணம். மேலான சாதி என்று பரப்பப்ட்டது. மற்ற அனைவரையும் "பிராமணர்க்கும் கீழ்ப்பட்ட மக்கள்" என்று கரந்தைக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்தணர் என்பதும் தாங்கள்தான் என்றனர். "அந்தணர் முதல் அரிப்பன் கடையாக" என்பதும் ஒரு கல்வெட்டுத் தொடர். தாராளமாக - ஏராளமாக நிலங்கள் பார்ப்பனர்கட்கு வழங்கப்பட்டன. அங்கு வசதியான வீடு கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தப்பட்டனர். தஞ்சையில் இருந்த சர்வசிவ பண்டித சைவாச்சாரியார் தாம் ஏராளமாகப் பெற்றது தவிர தன் சிடர்கட்கும், சிடருடைய சிடர்கட்கும் தஞ்சாவூரிலிருந்து ஆர்யதேசம், மத்ய தேசம், கௌடதேசம் ஆகிய நாட்டில் உள்ளார்க்கும் வருடம்தோறும் 2000 கல நெல் அனுப்பி வைத்தார். வடமொழிப் பார்ப்பனர்கள் தம்மை "சைவ புரந்தரச் சச்சரவர்த்தி" என்று அழைத்துக் கொண்டு அரசனுக்கு நிகர் என்றனர்.
"அகரப் பிரமதேயம், சதுர்வேதமங்கல்யம், பட்டவிருத்தி, சுரோத்திரியம், அத்யயனவிருத்தி, மாஸியம், சர்வமானியம், ஏகபோகம், கணபோகம்" என்று பல்வேறு பெயரிட்டுப் பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நில உடைமையாளர்களாக இருந்த வேளாளர்களின் நிலங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்கட்குக் கொடுக்கப்பட்டன. சில இடங்களில் அதை எதிர்த்து வேளாளர்கள் கிளர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். நிலங்கள் பிராமணர்கட்கு
"தானாதி வினிமய கிரய விக்கிரயங்களுக்கு யோக்கியமாய்
புத்திர பவுத்திர பாரம்பரியமாய் சந்திர சூரியர் உள்ளவரை
அட்டபோகத்துடன் ஆண்டு அனுபவித்துக் கொள்ள" அளிக்கப்பட்டன.
அரசர்களுக்கு, வழிகாட்டவே "மனு" நீதி நூல் எழுதப்பட்டது என்று கூறக்கேட்ட மன்னர்கள் தாங்கள் "மனு ஆறு பெருக" "மனு நெறி தழைக்க" அரசாள்வதாகத் தங்கள் மெய்க்கீர்த்திகளில் கூறிக்கொண்டனர். ஆனால் ஒருசில இடங்களில் தமிழ்க் குறுநில மன்னர்கள் மிகச்சிலர் தங்கள் ஆவணங்களில் "வள்ளுவர் உரைத்த முப்பால் மொழியின்படி" அரசாண்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. அரசர்கள் ஆதரவு பெற்ற பார்ப்பனர் நடத்திய வடமொழிக் கல்லூரிகள் பற்றிப் பல ஆவணங்கள் கிடைத்துள்ளதே தவிர தமிழ்க்கல்வி பற்றி அரசு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்ப் புலவர் பெருமக்களே தமிழைக் கற்பித்தனர் காத்தனர்.
தமிழ் அமைப்பைப் பார்த்துத் திருத்திச் செய்யப்பட்டதே வடமொழி. "சமஸ்கிருதம்" என்பதற்கும் அதுதான் பொருள். சிலர் "வடு + அல்" மொழி எனப்பிரித்துக் குற்றமில்லாத மொழி வடமொழி என்று கூறுவது மிகப்பெரும் பிழையாகும். மொழியியல் படியும் அது தவறு.
தமிழ் ஊர்ப்பெயர்கட்கெல்லாம் இதுதான் மூலம் என்று மொழிபெயர்ந்து வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். "நட்டூர் - மத்யபுரி" ஆயிற்று; "கருவூர் -கெர்ப்பபுரம்" ஆயிற்று; "பேரூர் -ஆதிபுரி" எனப்பட்டது. ஊர்ப் பெயர்கட்குப் புராணக் கதைகளையும் படைத்தனர். தஞ்சாவூருக்கும் "தஞ்சன்" என்ற அரக்கனுக்கும் தொடர்புபடுத்தினர். சிராப்பள்ளியை (சமணப்பள்ளி) "திரிசிரா" மூன்று தலையுடைய அரக்கனோடு தொடர்புபடுத்தினர். இராசராச சோழன் கட்டிய பெருவுடையார் - பெரியநாயகி கோயிலை "பிரகதீசுவரர்" "பிரகந்நாயகி" என்று அழைத்தனர் அழைக்குமாறு கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி இரண்டு ஆறுகள் கூடும் இடம். அங்குள்ள இறைவன் பெயர் "நண்ணாவுடையார்" அம்மன் பெயர் "பண்ணாரி மொழியம்மை" என எல்லாக் கல்வெட்டு, செப்பேடு, ஆவணம் அனைத்திலும் இப்பெயரே காணப்படுகிறது. ஆனால் "சங்கமேசுவரர்" "வேதநாயகி" என்ற பெயரை "மார்க்கசகாயர்" என மாற்றியதுபோல் ஏராளமான பெயர்களை மொழி பெயர்த்தனர் அல்லது மாற்றினர்.
தமிழகக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் பழந்தமிழர் கட்டிய பல கோயில்களில் காணுகின்றோம். வடநாட்டுக் கட்டடக் கலை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ஆனால் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. தமிழில் உள்ளவைகளை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு தமிழ்நூல்களை அழித்து விட்டதை அல்லவா இது காட்டுகிறது.
"தமிழ் ஓலைச் சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும், கார்த்திகை தீபத்தன்ற நெருப்பிலும் இடுவது புண்ணியம்" என்ற செய்தியைப் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சுவடிகள் அழிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் வடமொழியாளர்கள்.
வடமொழியாக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களின் வடிவம் அருவருப்பையும் ஏற்படுத்திகின்றன. ஈரோடு என்பது இரண்டு ஓடைகளால் ஏற்பட்ட பெயர். ஈரோடை-ஈரோடு ஆயிற்று. ஆனால் அதை "ஈரஓடு" என்று பிரித்து தலையில் கங்கையாறு இருப்பதால் ஈரமான தலை ஓட்டையுடைய சிவபெருமான் இருக்கும் ஊர் என்று கூறி "ஆர்த்தரகபாலபுரிசுவரர்" ஆக்கி ஈரோடு என்ப€யும் "ஆர்த்தரகபாலபுரி" ஆக்கிவிட்டனர். அம்மன் பெயர் "வாரணி அம்மை" (வார்=கச்சு); இப்பெயரைப் பூசையின்போது "குஜமஸ்த குசும ஸ்தானாம்பிகை" என்று கூறுகின்றனர். இதன் பொருள் "தர்ப்பைப் புல்லால் இறுக்கிக் கட்டப்பட்ட தனங்களை உடைய பார்வதி" என்பதாகும்.
வடமொழி ஆதிக்கத்தால் செம்மேனியுடைய சிவன், "ருத்திரன்" ஆனார்; தமிழ் முருகன் "சுப்பிரமணியர்" ஆனார்; மால், திருமால், விஷ்ணு எனப்பட்டார். வழக்கில் இல்லாத "இந்து" என்ற பொதுச் சொல்லையும் உருவாக்கினர். "வேதநெறி தழைத்தோங்க" தமிழ் கோயிலை விட்டு அகன்றது.
பூவால் செய்யப்பட்ட வழிபாடே "பூசை" ஆயிற்று என்பது அறிஞர் துணிவு. ஏராளமான சொற்களை வடமொழியில் பெயர்த்து அதுவே மூலச்சொல் என்றனர்.
மொழி, இலக்கிய வரலாற்று ஆய்வுகளைத் தொடங்கியவர்கள் மேனாட்டினரே என்பதில் ஐயமில்லை. தமிழர்கள் உயர்கல்வி கற்க இயலாதிருந்ததால் கற்ற பார்ப்பனர் மேனாட்டினரை அண்டியிருந்ததால் அவர்கள் ஆய்வும் வடமொழிக்கே வாய்ப்பாக இருந்தது. இன்றும்கூட தமிழகப் பெரும் ஆய்வாளர்கள் வடமொழியாளர் வகுத்த பாதையிலேயே நடைபோடுகின்றனர்.
"செட்டு" என்பது வணிகத்தைக் குறிக்கும் சொல். பல இலக்கியங்களில் பயின்று வருகிறது. செட்டு செய்பவன் செட்டியார்; ஆனால் தமிழ் ஆய்வாளர் பலர் "சிரேஷ்டி" என்ற சொல்லே செட்டியார் ஆயிற்று என்று எழுதுகின்றனர். சிரேஷ்டி மூத்தவனே தவிர செட்டியார் அல்ல.
"கோடு" என்ற சொல் அடிப்படையாகப் பிறந்தது "கோட்டை" என்பது. கோஷ்டம்தான கோட்டை ஆயிற்று என்கிறார் இந்தியப் புகழ்பெற்ற ஒரு வரலாற்று ஆசிரியர்; அவர் தமிழர்; சிவபெருமான் சிரித்து (நகல்புரிந்து) முப்புரத்தை எரித்ததால் "நக்கன்" எனப்பட்டார். சிவன் அடியார்க்கும் அப்பெயர் உண்டு. ஆனால் "நக்ணன்" என்ற சொல்லே நக்கன் ஆயிற்று என்பார் ஒரு தமிழ்ப் பேராசிரியர். வடமொழிக்கு அடிமையான தமிழ்ப் பேராசிரியர்கள், வரலாற்றாசிரியர் இன்னும் உள்ளனர்.
பார்ப்பனர் தொடர்பு இருந்தால்தான் ஒருவன் அறிஞன் ஆக முடியும் என்பதால் தானே "ஆதி" என்ற தாழ்த்ப்பட்ட பெண்ணுக்கும் "பகவான்" என்று பார்ப்பனனுக்கும் பிறந்தவர்கள் திருவள்ளுவர் என்ற பொய்க் கதை உருவானது. இந்தப் பொய்யை மெய்யென்று நம்பிய ஒரு பேரறிஞர் தம் கவிதைகளில் திருவள்ளுவரை "ஆதிபகவன் மைந்தன்" என்று மேடையில் பாடினார். தவறென்று தெரிந்த அக்கவிதை அச்சாகும்போது அந்தத் தொடரை நீக்கிவிட்டார்.
வடமொழி ஆழிப்பேரலை ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாமல் உள்ளன. அண்மையில் ஒரு பெரும் கவிஞர் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" சிறு வடமொழித் தாக்கம் இருப்பதாக எழுதியுள்ளார் அங்கிங்கெனாதபடி எங்கும் காணப்படுகிறது. அதன் தாக்கம் "மறையாமல் நின்று பல வடிவங்களில் காட்சியளிப்பது கொடுமையிலும் கொடுமை".
அதன் தாக்கம் சிதம்பரம் சிற்றம்பலம் சன்னதியில், திருமுக்கூடல் குடமுழுக்கு விழாவில், கரூர் பசுபதிவரர் கோயிலில் இருப்பதை இன்றும் காண்கிறோம். இனிமேலாவது பேரலையைத் தடுத்து நிறுத்துவது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
பிறமொழிக்கலப்பு தமிழில் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். வடமொழிக்கலப்பு இதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதை இயைபாக விவரிக்கிறது உங்கள் பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.
நன்றி சகோதரா, வடமொழி ஊடுருவியதால் தமிழுக்கு நன்மையே என சான்றோர் சிலர் வாதிடுகிறார்கள் என்பது வருத்தமான இருக்கிறது. அதற்கு சில நியாயங்களும் கற்பிக்கிறார்கள். வடமொழியைக் கொண்டு பிறமொழிச் சொற்களை சிறப்பாக உச்சரிக்க/எழுத முடியும் என்கிறார்கள். ஆனால் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள், பிறமொழிச் சொற்களை உச்சரிக்க/எழுத தொடங்கி விட்டால் தமிழ் இலக்கியங்களில் அந்நிய மொழிகளின் ஊடுருவல் அதிகரித்துவிடும். பிறமொழிச் சொற்களை உச்சரிக்க/எழுத முடியாத நிலைவரும் பொழுது அதற்கான மொழி பெயர்ப்பு தமிழிலே உருவாகிவிடும், இது தமிழ்மொழியின் சொல்லாட்சியை மேலும் வலுப்படுத்தும். ஆகவே வடமொழிக்கு ஒரு வரப்பை இடவேண்டும் என்பது தான் என்னுடைய வாதம்
2 comments:
பிறமொழிக்கலப்பு தமிழில்
ஏற்படுத்திய தாக்கம் ஏராளம்.
வடமொழிக்கலப்பு இதில் பெரும்பங்கு வகிக்கிறது.
அதை இயைபாக விவரிக்கிறது உங்கள் பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி.
நன்றி சகோதரா, வடமொழி ஊடுருவியதால் தமிழுக்கு நன்மையே என சான்றோர் சிலர் வாதிடுகிறார்கள் என்பது வருத்தமான இருக்கிறது. அதற்கு சில நியாயங்களும் கற்பிக்கிறார்கள்.
வடமொழியைக் கொண்டு பிறமொழிச் சொற்களை சிறப்பாக உச்சரிக்க/எழுத முடியும் என்கிறார்கள். ஆனால் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள், பிறமொழிச் சொற்களை உச்சரிக்க/எழுத தொடங்கி விட்டால் தமிழ் இலக்கியங்களில் அந்நிய மொழிகளின் ஊடுருவல் அதிகரித்துவிடும்.
பிறமொழிச் சொற்களை உச்சரிக்க/எழுத முடியாத நிலைவரும் பொழுது அதற்கான மொழி பெயர்ப்பு தமிழிலே உருவாகிவிடும், இது தமிழ்மொழியின் சொல்லாட்சியை மேலும் வலுப்படுத்தும். ஆகவே வடமொழிக்கு ஒரு வரப்பை இடவேண்டும் என்பது தான் என்னுடைய வாதம்
Post a Comment