தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்புங்கள்.
மானிடத்தை கொல்லும் மரணதண்டணையை ஒழிப்போம் தமிழர்களே ஒன்றுபடுங்கள்..
குற்றம் சட்டம் என்பதற்கு அப்பால் மரணம் என்பது மனிதனின் வாழ்வுரிமையை அழிக்கிறது, நல்லவனோ கெட்டவனோ எவனுடைய மரணமும் அவனுடைய குடும்பத்தை பாதிக்கிறது. ஒரு மனிதனுடைய அடயாளங்களை அழிக்கின்ற தூக்குத்தண்டணையை தூக்கிலிடுவோம் வாரீர் தோழர்களே. இம்மூன்று தமிழர்களின் தூக்கு தண்டணையின் அரசியல் பின்னணி யாவரும் அறிந்ததொன்றே, உறங்காதீர்கள் தோழர்களே எம் உறவுகளின் தூக்கு கயிறை அறுக்கின்ற வலிமை ஒவ்வொரு தமிழர்களின் கையிலும் உள்ளது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது ஆர்ப்பாட்டங்களின் மூலமாகவோ உங்கள் பங்களிப்பை பதிவுசெய்யுங்கள்.
இவர்களின் விடுதலை எம் இனத்தின் விடுதலை
0 comments:
Post a Comment