சிவம் என்றால் அன்பு, அன்பு என்றால் சிவம், சிவம் என்பது இன்ப ஊற்று, உலக மகா சக்தி என்று கூறும் சைவ சமயத்தவராக நீங்கள் இருப்பின்; என் ஐயங்களை நீக்குவீரோ?
தலை சடையாகவும், ஆடை மிருகத்தின் தோலாகவும், அணிகலன் பாம்பாகவும் எலும்பாகவும், கொன்றை எருக்கம் பூக்களாகவும், பாத்திரமாக மண்டை ஓடும், இடம் மலை, விளையாடுவது சுடலை, பூசுவது சாம்பல், வாகனம் மாடு, நடனம் காட்டுமிராண்டி ஆட்டம், இசைக்கருவி உடுக்கை இது போதாமல் கையில வேல். அன்பு அன்பு என்று சொல்லுகிற சாமிக்கு ஏன் இத்தனை கொடூரமான கருவிகள்? ஆயிதத்தைக் காட்டியா இல்லை வெருட்டியா அன்பை கொடுக்கிறாரு/வாங்கிறாரு?
கடவுளே இப்படி ஒரு போக்காக இருக்கிறாரே இனி இவருடைய சைவ மதத்தைப்பற்றி சில கேள்விகள்.. இந்துசமயத் திலே ஒரு மிக முக்கியமான ஒருகொள்கை வர்ணாச்சிரமக் கொள்கை அதில் ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு அங்கத்தில் இருந்து வந்ததாக தத்துவம் சொல்கிறது. உயர்ந்த சாதியினரை தலையில் இருந்தும் தாழ்ந்த சாதியினரை காலில் இருந்து பிரம்மா படைத்தாரென்று கூறப்படுகிறது.படைத்தபடைப்பின் படியே அவர் அவரது தொழில் செய்யவேண்டும். நீயும், நானும் சைவசமயத்தைப்பற்றி எவ்வளவுதான் அறிந்தாலும் படித்தாலும் நாங்கள் அந்தணர் (ஐயர்) ஆகிவிடமுடியாது.இதைத் தீர்மானிப்பது எமது பெற்றோர் அல்லது அவர்களின் சாதி. நாங்கள் பிறக்கும் போதே நீ எந்த சாதி அந்த தொழில் மட்டுமே செய்ய வேண்டும். இது இந்து சமயக்கொள்கை. சாதரண கிறீஸ்தவன் படித்து பாதிரியார் ஆகலாம் .சாதரண முஸ்லீம் படித்துமெளலவி ஆகலாம். ஆனால் நீயும் நானும் என்னதான் செய்தாலும் மாற முடியாது என்று சொல்கின்ற மதத்தினை பின்பற்றுகிற சரியா? அல்லது பிழையா? சாதிய முறையினை விதைது மனிதனை பிளவு படுத்துகின்ற சைவசமயம் தேவைதானா?
இறுதியாக; உனக்கும் எனக்கும் புரியாத மொழியிலே பூசை, என்னென்றுகேட்டால் மந்திரம், இந்த சமஸ்கிருத மந்திரங்களை எத்தனையோ பேர் தமிழிற்கு மொழி பெயர்த்தார்கள். மக்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் ஓதினால்தானே மக்களுக்கு என்ன நடைபெறுகிறது என்று விளங்கும். சமஸ்கிருதத்தில சொன்னால் எனக்கு விளங்காது, தமிழில சொன்னால் கடவுளுக்கு விளங்காதா?
இப்படி தமிழை ஒதுக்கி அழித்து தமிழுக்கும் பஞ்சமாகிவிட்டது நாட்டில.
தமிழனையும் பஞ்சமன் என்கிறான் சூத்திரன் என்கிறான் இந்த பார்ப்பான்.
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத்தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
0 comments:
Post a Comment