தனி மனித ஒழுக்கம் தவறிச் செயற்படுபவர்களுக்கு நித்தியானந்தாவின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது . இன்றைக்கு எல்லா இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் ஒரு மூலையிலாவது நித்தியாநந்தா தொடர்பான செய்திகள் இல்லாமலில்லை . தொலைக்காட்சியிலும் கூட இது தொடர்பான செய்திகளுக்கு தனியிடம் ஒதுக்கப்படுகிறது . இதற்கு காரணம் என்ன ? உண்மையிலேயே போலிச்சாமியார்களின் முகத்திரையை கிழித்தி அவர்களின் காமலீலைகளை அம்பலப்படுத்தி மக்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்து சமூகத்தை அறத்தோடும் நாட்டை நன்நெறியோடும் வாழவைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவா இத்தைய காணொளிகள் , புகைப்படங்களை தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் வெளியிடுகிறார்கள் ?
நடிகைகள் தொடர்பான செய்திகள் , நடிகைகளின் புகைப்படங்கள் , சினிமா கிசுகிசுக்கள் , வன்புணர்ச்சிகள் தொடர்பான செய்திகள் போன்ற பகுதிகள் இளையோரை அதிகம் கவருகின்றனவாக காணப்படுகின்றது . இவை சில ஊடகங்களுக்கு தரவரிசை போட்டியை சமாளிக்க பெரிதும் உதவியாக இருக்கின்றன . அந்த வகையிலே நித்தியாநந்தா விவகாரத்தையும் சில ஊடகங்கள் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்த தவறவில்லை . இதற்கு அவ்வூடகங்கள் தரும் பதில் ; ஊடகங்களுக்கு என்றொடு சட்டம் இருக்கிறது , தனிமனித சுதந்திரத்தை அல்லது தனிமனித வாழ்வை தவிர பொதுவாழ்க்கையில் ஈடுபடுகின்ற எவரையும் விமர்ச்சித்து செய்தி வெளியிடமுடியும் . இது உண்மை . ஆனால் கேள்வி அதுவல்ல . சண் தொலைக்காட்சியில் வர்ணனையோடு நேரடி ஒளிபரப்பை போல காண்பித்தார்கள் திரும்பத்திரும்ப காண்பித்தார்கள் . ஒரு அலைவரிசையில் மட்டுமல்ல சண் குழுமத்தின் நாற்பது அலைவரிசைகளிலும் காண்பித்தார்கள் . நற்கீரனும் விதிவிலக்கல்ல . நீங்கள் சாமியாரின் படங்களை பிரசுரியுங்கள் பிரச்சனையில்லை .
உலகத்தில் பஞ்சம் பட்டினி என்று மக்கள் தினமும் சாகிறார்கள் , ஒரு வேளை குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் சோமாலியாவில் மக்கள் அலைந்து திரிகிறார்கள் , சூழல் மாசடைகிறது , சுற்றாடல் வெப்பமடைகிறது , சுவாசிக்க சுத்தமான காற்று கூட சில சமையம் கிடைப்பதில்லை , விஞ்ஞானத்தின் விபரீதங்களால் ஏற்படுகின்ற அனர்த்தங்கள் , இயற்கை அனர்த்தங்கள் , விபத்துக்கள் பயங்கரவாதச் செயல்கள் போன்றன தொடர்பாக பன்னாட்டு ஊடகங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணங்களையும் விழிப்புணர்வுகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கிக்கொண்டு வருகிறது .
ஆனால் தமிழ் ஊடகங்கள் சாதித்தது என்ன ?
சனல் 4 தொலைக்காட்சி , இலங்கை தமிழர்கள் யுத்ததின் போது எதிர் கொண்ட விளைவுகளை ஆய்வு செய்வதின் மூலம் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது . ஆனால் இந்த சண் தொலைக்காட்சி தமிழர்களுடைய யுத்தத்தின் போதான உயிர் சேதங்கள் இழப்புக்கள் தொடர்பாக ஏதேனும் ஒரு செய்தியை வெளியிட்டிருக்குமா ? முத்துகுமார் மூட்டிய தீ தமிழகத்தையே எரியவைத்தபோது ஏன் இந்த தொலைக்காட்சி மெளனமாக இருந்தது ? காட்டவேண்டிய விடையங்களை மக்களுக்கு காண்பிக்காமல் மறைத்துவிட்டு ஒரு நடிகையின் அந்தரங்கங்களை படம்பிடித்து காட்டுவதா உங்கள் ஊடகதர்மம் .
தரவரிசைகளையும் விளம்பரங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படாது ஊடகங்கள் தான் சமூகத்தை நெறிப்படுத்துகிற ஆசான் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும். அப்போது தான் சமுதாயம் மிளிரும் நாடும் வளரும்.
Alivetamil blog
http://www.alivetamil.blogspot.com/
internet marketing
0 comments:
Post a Comment